/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொதுத்தேர்வு நிறைவால் மாணவர் உற்சாகம்
/
பொதுத்தேர்வு நிறைவால் மாணவர் உற்சாகம்
ADDED : ஏப் 16, 2025 01:10 AM
பொதுத்தேர்வு நிறைவால் மாணவர் உற்சாகம்
ஈரோடு:தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச், 28ல் துவங்கியது. இறுதி தேர்வாக சமூக அறிவியல் பாடத்தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 117 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. நேற்று தேர்வு முடிந்ததும் வெளியே வந்த மாணவ, மாணவிகள், நோட்டு பேப்பர்களை கிழித்து வீசியும், பேனா இங்க்கை ஒருவர் மீது ஒருவர் விரட்டி சென்று தெளித்தும், பல வண்ண பொடிகளை முகத்தில் ஒருவருக்கொருவர் பூசியும் மகிழ்ந்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள், திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி, கோபி வைரவிழா மேல்நிலை
பள்ளியில் திருத்தப்படுகிறது. ஈரோடு மாவட்ட விடைத்தாள் பிற மாவட்டத்துக்கும், பிற மாவட்ட விடைத்தாள் ஈரோடு மாவட்டத்துக்கும் வரும். பிரச்னை ஏதுமின்றி பொதுத்தேர்வுகள் முடிந்ததால், பள்ளி கல்வித்துறையினர் மட்டுமின்றி ஆசிரியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

