/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனத்துறை சார்பாக நாய்களுக்கு தடுப்பூசி
/
வனத்துறை சார்பாக நாய்களுக்கு தடுப்பூசி
ADDED : செப் 06, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை :சென்னிமலை வனச்சரகத்தில் வன எல்லையோர வீடுகள், விவசாய தோட்டங்களில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, சத்தி புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் சதாசிவம், நேற்று தடுப்பூசி போட்டார்.
வனப்பகுதிகளில் பல இடங்களில் சதாசிவம் ஆய்வு செய்து, வன எல்லையோரம் வசிக்கும் மக்களிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு வனச்சரக அலுவலர், வனவர், வனகாப்பாளர்களிடம் கலந்துரையாடினார். சென்னிமலை வனப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பது குறித்தும்அறிவுரை வழங்கினார்.