/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செங்கோட்டையனின் வீட்டுக்கு படையெடுக்கும் ஆதரவாளர்கள்
/
செங்கோட்டையனின் வீட்டுக்கு படையெடுக்கும் ஆதரவாளர்கள்
செங்கோட்டையனின் வீட்டுக்கு படையெடுக்கும் ஆதரவாளர்கள்
செங்கோட்டையனின் வீட்டுக்கு படையெடுக்கும் ஆதரவாளர்கள்
ADDED : செப் 11, 2025 01:35 AM
கோபி, அ.தி.மு.க.,வின் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகவும், எதிர்பார்ப்புடன், அனைத்து கட்சியினர் கவனித்து வருகின்றனர். இதில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் அடக்கம். அவரை சந்திக்கும் நிர்வாகிகளை, கட்சி மேலிடம் பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறது.
ஆனாலும், செங்கோட்டையனை, அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சியினர் பார்ப்பது குறைந்தபாடில்லை. புதுடில்லி சென்றதால், இரண்டு நாளாக கோபி அருகேயுள்ள அவரது பண்ணை வீடு, கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. புதுடில்லியில் இருந்து நேற்று முன்தினம் அவர் திரும்பிய நிலையில், இந்த இரு இடங்களும் மீண்டும், பரபரப்பாக மாறிவிட்டன.
கோபி நகர நிர்வாகி கள், கரட்டூர் கட்சி அலுவலகத்தில் இருந்து பைக்கில், நேற்று ஊர்வலமாக புறப்பட்டு, குள்ளம்பாளையம் பண்ணை வீட்டில் உள்ள செங்கோட்டையனை நேற்று காலை சந்தித்தனர்.
இதையடுத்து ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜன், விவசாய அணி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், சிவகங்கை மாவட்ட செயலாளர் அசோகன் அடங்கிய குழுவினர் சந்தித்தனர். இதேபோல் பொம்மநாயக்கன்பாளையம், நம்பியூர், வெள்ளாங்கோவில் பகுதி கிராம மக்கள், கட்சியினரும் சந்தித்தனர்.