/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சத்துணவு மையங்களுக்கு சிம் கார்டு மட்டும் வழங்கி விட்டு, ஆன்லைன் திட்டத்தை துவங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. காலி பணியிடங்களை நிரப்பாமல் கூடுதல் பணிகளை கொடுக்க கூடாது.
தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு திட்டத்தில் பணியாளர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார்.
* திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடத்திலும், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் விஜயா தலைமையிலான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.