/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மசோதாவை கண்டித்து ஆசிரியர் ஆர்ப்பாட்டம்
/
மசோதாவை கண்டித்து ஆசிரியர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 29, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில், ஈரோடு திண்டல் தனியார் கல்லுாரி முன், செயலாளர் சவுந்தர்யா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு உதவி பெறும் கல்லுாரிகளை தனியார் மயமாக்கக கூடாது.
அவற்றை தனியார் வசம் வழங்கி பல்கலைகழகமாக மாற்ற தமிழக அரசின் உயர்கல்வித்துறை மசோதா தாக்கல் செய்துள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். முடிவையும் அரசு கைவிட வலியுறுத்தினர். மாநில நிர்வாகிகள் சாத்தப்பன், பசுபதி, கோகிலா உட்பட பலர் பேசினர்.

