/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தரைப்பாலத்தை சீரமைத்த கடம்பூர் கிராம மக்கள்
/
தரைப்பாலத்தை சீரமைத்த கடம்பூர் கிராம மக்கள்
ADDED : அக் 29, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், கடம்பூர் மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால், பவளக்குட்டை- -கானக்குந்துார் செல்லும் வழியில் அசகத்தி கோம்பை பள்ளம் தரைப்பாலம், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் போக்குவரத்து தடைபட்டது.சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் முன் வராததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் மக்களே ஒன்று சேர்ந்து சேதமடைந்த தரைப்பாலத்தை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் கற்கள், மணல், கொண்டு சீரமைத்தனர்.
இதனால் அந்த வழியாக வாகனங்கள் தற்போது செல்ல முடிகிறது. தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டித்தர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

