ADDED : மே 31, 2026 03:17 AM
'கோபி:''தமிழகத்தில் ஒரு ஊழலற்ற ஆட்சி என்பது தான், முதல்வரின் லட்சிய பயணமாக உள்ளது,'' என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபி கொளப்பலுார் சாலையை சேர்ந்தவர், சுரேஷ், 42; இவரின் மனைவி மஞ்சுளா, 38; சிறுவலுார் அருகே பன்றி இறைச்சி கடை நடத்தினர். கடந்த, 24ம் தேதி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இடி-மின்னல் தாக்கி தம்பதி பலியாகினர். இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், பலியான தம்பதியின் மகள் அனுசுயா, 18, மகன் கதிரேஷ், 16, ஆகியோரை, கொளப்பலுாரில் உள்ள அவர்களது வீட்டில், நேற்று காலை சந்தித்து ஆறுதல் கூறினார். பேரிடர் நிவாரண நிதியாக எட்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆணையை வழங்கினார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இடி-மின்னல் தாக்கி பலியான தம்பதியர் குழந்தைகள், என்ன கல்வி பயின்றுள்ளனரோ, அதற்கேற்ப அரசின் சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சிதான், முதல்வரின் லட்சிய பயணமாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில், நாங்கள் அனைவரும், அதற்கான பணிகளை தெளிவோடு, அதை
நடைமுறைப்படுத்த உள்ளோம்.
