பொதுத்தேர்வில் சிறப்பிடம் மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு
பொதுத்தேர்வில் சிறப்பிடம் மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு
ADDED : ஜூன் 18, 2026 04:59 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்,
2026ம் ஆண்டு பிளஸ் ௨ தேர்வில், சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு
ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர் இளங்கோ,
முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி
கவுரவித்தார்.
இதேபோல் 10ம் வகுப்பில் சிறந்த மாணவியருக்கும்
ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை சிறப்பாக
செயல்பட்ட மாணவிகளுக்கு, முழு ஆண்டுத்தேர்வு மதிப்பெண்
அடிப்படையில் கவுரவம் செய்யப்பட்டது. நிகழ்வில் பள்ளி செயலாளர்
சிவானந் தன், தாளாளர் கணேசன், தலைமையாசிரியை கவிதா, ஆசிரியைகள்
மற்றும்
மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
