/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடைத்தேர்தல் விதிமீறலில்18 வழக்கு பதிவு
/
இடைத்தேர்தல் விதிமீறலில்18 வழக்கு பதிவு
ADDED : ஜன 31, 2025 01:32 AM
இடைத்தேர்தல் விதிமீறலில்18 வழக்கு பதிவு
ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினர், நடத்தை விதிகளை மீறுகின்றனரா? என பறக்கும் படையினர் கண்காணித்து அளிக்கும் புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
இந்த வகையில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொடி கம்பங்கள், முன் அனுமதியின்றி கூட்டம் நடத்துபவர்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பிரசாரம் செய்தவர்கள், வாக்கு கேட்டு விளம்பர பதாகைகளை வைத்து விதி மீறியதாக, நா.த.க., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மீது இதுவரை, 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள்
தெரிவித்தனர்.

