/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மிரட்டி பணம் பறித்தஇளசுகள் 2 பேர் கைது
/
மிரட்டி பணம் பறித்தஇளசுகள் 2 பேர் கைது
ADDED : ஏப் 04, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மிரட்டி பணம் பறித்தஇளசுகள் 2 பேர் கைது
மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி, நன்செய் ஊத்துக்குளி, சாவடிபாளையம் புதுார், விநாயகர் நகரை சேர்ந்தவர் முருகன், 45; ஈரோடு சென்று விட்டு கரூர் சாலை கொள்ளுக்காடு மேடு பகுதியில் நேற்று காலை 10:30 மணிக்கு பைக்கில் சென்றார். அப்போது மொபைல்போனில் அழைப்பு வரவே, சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு பேசினார்.
அப்போது வந்த லக்காபுரம், கரட்டான்காடு, பாரதி, 20, பிரபாகரன், 25, ஆகியோர் முருகனிடம் பணம், மொபைல் போனை கேட்டுள்ளனர். தர மறுக்கவே மிரட்டல் விடுத்து, 1,500 ரூபாயை பறித்து சென்றனர். அவரது புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் இருவரையும் கைது
செய்தனர்.

