/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூதாட்டியை கொன்று வீடு எரிப்பு20 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை
/
மூதாட்டியை கொன்று வீடு எரிப்பு20 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை
மூதாட்டியை கொன்று வீடு எரிப்பு20 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை
மூதாட்டியை கொன்று வீடு எரிப்பு20 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை
ADDED : மார் 20, 2025 01:55 AM
மூதாட்டியை கொன்று வீடு எரிப்பு20 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை
சூளகிரி:சூளகிரி அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வெட்டிக்கொலை செய்து, வீட்டை தீ வைத்து எரித்த மர்ம கும்பல், வீட்டிலிருந்த, 20 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே அட்டகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரப்பா. விவசாயி. இவர், நாகம்மா, 65, என்பவரது மகள்களான ராணி, தெய்வானை ஆகிய இருவரை திருமணம் செய்துள்ளார். மருமகன் வீட்டில் நாகம்மா வசித்து வந்தார். நேற்று காலை அனைவரும் வீட்டிலிருந்து அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளனர். மதியம், 2:00 மணிக்கு, நாகம்மா மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டின் ஹால் பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதில், வீட்டிலிருந்து நாகம்மா தீக்காயமடைந்து பலியானார். அவரது உடலில் வெட்டு மற்றும் கத்திகுத்து காயங்கள் இருந்தன.
ஓசூர் அருகே, ஒன்னல்வாடியில் கடந்த, 12 ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த லுார்துசாமி, 70, அவரின் மனைவியின் தங்கை எலிசபெத், 60, ஆகியோர் வெட்டிக்கொல்லப்பட்டு, வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. அதேபோல் இச்சம்பவத்தையும் செய்த மர்ம கும்பல், வீட்டு பீரோவிலிருந்த, 20 பவுன் நகை, 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பியது, சூளகிரி போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இரு சம்பவத்தில் ஈடுபட்டதும், ஒரே கும்பலா என போலீசார் சந்தேகிக்கின்றனர். மர்ம கும்பல் வைத்த தீயில், வீட்டிலிருந்த, 30 மூட்டை ராகி மற்றும் நெல் எரிந்து
நாசமாகியது.சூளகிரியில் நேற்று, 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில் கள ஆய்வில் இருந்த மாவட்ட எஸ்.பி., தங்கதுரை சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். சூளகிரி போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஒன்னல்வாடி முதியவர்கள் கொலையில் போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை. அதேபோல், மூதாட்டி நாகம்மா கொலையிலும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. அட்டகுறுக்கி பகுதியிலுள்ள, 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை குறி வைத்து, ஒரே வாரத்தில் 3 கொலை சம்பவங்களை, மர்ம கும்பல் அரங்கேற்றி உள்ளதால், பொதுமக்கள்
பீதியடைந்துள்ளனர்.