/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடனுதவி பெற 'டாம்கோ'சார்பில் 21 முதல் முகாம்
/
கடனுதவி பெற 'டாம்கோ'சார்பில் 21 முதல் முகாம்
ADDED : ஏப் 09, 2025 01:36 AM
கடனுதவி பெற 'டாம்கோ'சார்பில் 21 முதல் முகாம்
ஈரோடு, :தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் வழங்கப்படும் தனி நபர் கடன், கைவினை கலைஞர் கடன், சுய உதவிக்குழு கடன் திட்டங்களுக்கு, விண்ணப்பம் பெற முகாம் நடக்க உள்ளது. கடன் பெற விரும்புவோர், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, இருப்பிட சான்று, ஜாதிச்சான்று, வருமான சான்று நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ-4, தொழில் நுட்ப அறிக்கை எடுத்து வர வேண்டும்.
வரும், 21ல் பி.பெ.அக்ரஹாரம் நகர கூட்டுறவு கடன் சங்கம், சத்தி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், 22ல் நசியனுார் நகர கூட்டுறவு கடன் சங்கம், காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, பெரிய
புலியூர், அந்தியூர், தாளவாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், 23ல் காசிபாளையம், திண்டல் மலை, லக்காபுரம் புதுார், சங்கம், அவல்பூந்துறை, வடக்கு புதுப்பாளையம், பெரியகொடிவேரி சங்கங்கள், 24ல் ஈரோடு வங்கி வளாகம், பவானி, சத்தி நகர வங்கியிலும் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்கிறது.