/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டு சேலை கடை பூட்டை உடைத்து 23 பவுன், ரூ.8.50 லட்சம் திருட்டு
/
பட்டு சேலை கடை பூட்டை உடைத்து 23 பவுன், ரூ.8.50 லட்சம் திருட்டு
பட்டு சேலை கடை பூட்டை உடைத்து 23 பவுன், ரூ.8.50 லட்சம் திருட்டு
பட்டு சேலை கடை பூட்டை உடைத்து 23 பவுன், ரூ.8.50 லட்சம் திருட்டு
ADDED : ஜூலை 04, 2024 07:41 AM
புன்செய் புளியம்பட்டி : பவானிசாகர் அருகே, கடையின் பூட்டை உடைத்து, 23 பவுன், ரூ.8.50 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
ஈரோடு மவட்டம், பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ, 53. கைத்தறி பட்டு சேலை தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வருகிறார். இவரது கடை, தொட்டம்-பாளையம் ராஜிவ் நகரில் அமைந்துள்ளது. கடையை ஒட்டி வீடும் உள்ளது. இளங்கோ அதே ஊரில், வேறு பகுதியில் புதிய வீடு கட்டி குடிபெயர்ந்ததால், தினமும் பழைய வீட்டில் உள்ள கடைக்கு வந்து வியாபாரம் முடித்து விட்டு, மீண்டும் பூட்டி விட்டு புதிய வீட்டிற்கு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு, இளங்கோ வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு பீரோக்-களில் வைத்திருந்த, 23 பவுன் நகை, ரொக்கம், 8.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடையில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டிருந்த நிலையில், அதை ஆய்வு செய்த போது கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க் கருவிகளை, கொள்ளையர்கள் திருடி சென்று விட்டதால் பவானிசாகர் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஈரோட்டில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்-கப்பட்டது. சத்தியமங்கலம் டி.எஸ்.பி., சரவணன் திருட்டு நடந்த வீட்டில் ஆய்வு நடத்தினார். பின், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
போலீசார் கூறுகையில், 'கேமராவில் பதிவான ஹார்ட் டிஸ்க் கரு-விகளை, கொள்ளையர்கள் திருடி சென்ற நிலையில், வேறு பகுதி-களில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில். நள்ளிரவு, 2:00 மணியளவில் சிவப்பு நிற கார் ஒன்று அந்த பகு-திக்கு வந்து விட்டு, மீண்டும், 2:30 மணியளவில் சென்றுள்ளது தெரிந்தது. சிவப்பு நிற காரில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.