/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 25ல் தபால் துறைகுறைதீர் நாள் கூட்டம்
/
வரும் 25ல் தபால் துறைகுறைதீர் நாள் கூட்டம்
ADDED : மார் 09, 2025 01:40 AM
வரும் 25ல் தபால் துறைகுறைதீர் நாள் கூட்டம்
ஈரோடு:ஈரோடு கோட்ட அளவிலான, தபால் துறை குறைதீர் நாள் கூட்டம் வரும், 25ல் நடக்க உள்ளது. இதுபற்றி, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு அஞ்சல் கோட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வரும், 25 காலை, 11:00 மணிக்கு, ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. அஞ்சல் துறை சேவை குறித்த குறைகள், கோரிக்கைகள் கேட்டறியப்படும். புகார்கள், மனுக்களை தபால் மூலம் வரும், 20க்குள், 'முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001' என்ற முகவரிக்கு அனுப்பலாம். வரும், 20 வரை அலுவலக வேலை நாட்களில் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மனுவாக வழங்கலாம்.