/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மார்ச் 4ல் கள் விடுதலை கருத்தரங்கம்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தகவல்

ADDED : பிப் 14, 2025 01:14 AM
மார்ச் 4ல் கள் விடுதலை கருத்தரங்கம்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தகவல்
ஈரோடு, :''திருப்பூர் மாவட்டத்தில் கள் விடுதலை கருத்தரங்கு மார்ச், 4ல் நடக்க உள்ளது,'' என்று, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரோட்டில் அவர் கூறியதாவது:
கள்ளுக்கு தமிழகத்தில் மட்டுமே தடை உள்ளது. பக்கத்து மாநிலமான கேரளா, புதுச்சேரியில் கூட இல்லை. எனவே வரும் மார்ச், 4ல் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், 'கள் விடுதலை கருத்தரங்கம்,' திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி - தாராபுரம் சாலை, கொங்கல் நகரம் பவித்ரம் மஹாலில் நடக்க உள்ளது. பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சீமான், ஜி.கே.வாசன், கோ.க.மணி, ஈ.ஆர்.ஈஸ்வரன் உட்பட பலரும் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளனர். மேலும் பலரிடம் பேசி வருகிறோம்.
கள்ளுக்கான தடை நீங்கும்போது, தென்னை, பனையை பாதுகாக்க விவசாயிகள் விரும்புவார்கள். அவ்வாறு இல்லாததால்தான், வெள்ளை ஈ உட்பட பல நோய் தென்னையை தாக்கி, ஒரு கிலோ தேங்காய், 60 ரூபாய்க்கு விற்கிறது. விரைவில், 100 ரூபாயை எட்டும். இவ்வாறு கூறினார்.
நிர்வாகிகள் சண்முகம், கதிரேசன், பொடரான் உட்பட பலர் பங்கேற்றனர்.