/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மரவள்ளி கிழங்கு ரூ.5,000க்கு விற்பனைகலப்படத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

ADDED : மார் 09, 2025 01:59 AM
மரவள்ளி கிழங்கு ரூ.5,000க்கு விற்பனைகலப்படத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ஈரோடு:ஜவ்வரிசியில் கலப்படத்தை கட்டுப்படுத்தாததால், 12,000 ரூபாய்க்கு விற்ற மரவள்ளி கிழங்கு, 5,000 ரூபாயாக குறைந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்தாண்டு ஒரு டன், 12,000 ரூபாய்க்கும் மேலான விலையில் மரவள்ளி கிழங்கு விற்றது. தற்போது, 5,000 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மரவள்ளி பயிரிட்ட விவசாயிகள் பாதித்துள்ளனர். இதற்கு பல காரணம் இருந்தாலும், முதன்மை காரணம் கலப்படமாகும். போர்ச்சுகீசியரால் இந்தியா வந்த மரவள்ளி, தமிழகத்துக்கு ஏற்ற பயிர். குறைந்த நீரில் அதிக மகசூல் தரும். அதிகமாக உயிர் காற்றான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. ஜவ்வரிசி அதிக வெண்மை நிறமாக இருந்தால், கூடுதல் விலை கிடைக்கும் என்பதால், துணிகளை வெளுக்க பயன்படும் சோடியம் ைஹப்போ குளோரைடு, கால்சியம் ைஹப்போ குளோரைடு ரசாயன கலப்பு செய்கின்றனர். இக்கலப்பால், நுகர்வு குறைகிறது.
தவிர ஜவ்வரிசி தயாரிப்புக்கு மரவள்ளிக்கு மாற்றாக ரேஷன் அரிசி, மக்காசோளம், வேதிப்பொருட்களை கலப்பதை, அதிகாரிகள் கண்டுபிடித்து, ஆலை உரிமத்தை ரத்து செய்வதில்லை. இதனால் ஜவ்வரிசி நுகர்வு குறைவதுடன், மரவள்ளிக்கு விலை கிடைக்கவில்லை. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து, கலப்படத்தை தடுத்து, மரவள்ளிக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.