/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் நகராட்சி கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
காங்கேயம் நகராட்சி கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றம்
காங்கேயம் நகராட்சி கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றம்
காங்கேயம் நகராட்சி கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஏப் 25, 2025 01:11 AM
காங்கேயம்:
காங்கேயம் நகராட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், நகராட்சி துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர். நகராட்சியில் உள்ள, 18 வார்டுகளிலும், குடிநீர் பிரச்னைகள் உள்ள பகுதிகளில் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
மின் மோட்டார் மற்றும் சிறு மின் விசைப்பம்புகளின் பழுதுகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்பட, 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வார்டுகளில் தடையின்றி குப்பை அள்ளப்பட வேண்டும். சாக்கடை சுத்தம் செய்ய வேண்டும். அம்ரூத் குடிநீர் திட்டத்தில் குழாய்கள் கவனிப்பாரற்றும், கைவிடப்பட்ட நிலையிலும் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.