/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாளர் மகளிர் கல்லுாரியில்55-வது விளையாட்டு விழா
/
வேளாளர் மகளிர் கல்லுாரியில்55-வது விளையாட்டு விழா
ADDED : பிப் 26, 2025 01:13 AM
வேளாளர் மகளிர் கல்லுாரியில்55-வது விளையாட்டு விழா
ஈரோடு,: ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரியின், 55-வது விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெயந்தி வரவேற்றார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
வேளாளர் மகளிர் கல்லுாரி செயலர் சந்திரசேகர், பொருளாளர் அருண் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் குலசேகரன், ராசமாணிக்கம், சின்னசாமி சிறப்பு விருந்தினரை கவுரவித்தனர்.
சிறப்பு விருந்தினராக தியான் சந்த் வாழ்நாள் விருது பெற்ற, துணை கமாண்டன்ட் (விரைவு அதிரடிப்படை) ஜின்சி பிலிப் பங்கேற்று, விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து மாணவியர் பல்வேறு கலை நிகழ்ச்சி, பலவகை வீர விளையாட்டுக்கள், சாகசங்களை நிகழ்த்தினர். கல்லுாரி விளையாட்டுத்துறை இயக்குனர் மாலதி, விளையாட்டுத்துறை ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர் தன் உரையில், உடல் நலத்தை பேணும் வழிகுறித்தும், இன்றைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்க-வழக்கங்களையும் எடுத்துரைத்து பரிசு வழங்கினார். நிறைவில் விளையாட்டு துறை இணை செயலர் நந்தினி தேவி நன்றி கூறினார்.

