/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் வெறிநாய்கடித்து 6 பேர் படுகாயம்
/
காங்கேயத்தில் வெறிநாய்கடித்து 6 பேர் படுகாயம்
ADDED : பிப் 19, 2025 02:00 AM
காங்கேயத்தில் வெறிநாய்கடித்து 6 பேர் படுகாயம்
காங்கேயம்:காங்கேயம் நகராட்சி உடையார் காலனியில் கடந்த சில தினங்களாக ஒரு வெறிநாய் சுற்றி திரிகிறது.
நேற்று காலை தெருக்களில் நடந்து மற்றும் வாகனத்தில் சென்றவர்களை துரத்தி கடிக்க ஆரம்பித்தது.
நகராட்சி கொசு புகை மருந்து தெளிக்கும் பணியாளர் வெங்கடாசலம், 45, கொசு புகை மருந்து தெளிக்க வாகனத்தில் இருந்து இறங்கிய போது, காலில் கடித்தது.
அதே பகுதியில் மோகன்ராஜ், 45, வசந்தி, 53, உலகநாதன், 45, பாலசுப்பிரமணியம், 75, மற்றும் 13 வயது பள்ளி சிறுவனை நாய் கடித்தது. ஆறு பேருக்கும் காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தெருநாய்களை பிடிக்கும் வாகனம் மற்றும் கருத்தடை அறுவடைக்கூடம் ஒரு வாரத்துக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மக்கள் மற்றும் கால்நடைகளை அச்சுறுத்தும் நாய்களை பிடிக்கும் பணி தொடங்கும் என்று,
நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ் தெரிவித்தார்.

