/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம் எஸ்.ஐ., உள்பட 7 பேருக்கு காயம்
/
விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம் எஸ்.ஐ., உள்பட 7 பேருக்கு காயம்
விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம் எஸ்.ஐ., உள்பட 7 பேருக்கு காயம்
விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம் எஸ்.ஐ., உள்பட 7 பேருக்கு காயம்
ADDED : ஜூலை 24, 2024 08:16 AM
பவானி : கோவை மத்திய சிறை விசாரணை கைதிகளான, கேரளாவை சேர்ந்த முகமது சாபுதீன், 50; பீஹாரை சேர்ந்த ஆரிப்ராஜா, 27; மதுரை, வாடிப்பட்டி மாலக் பாட்ஷா, 22, என மூவரை, சென்னை புழல் சிறையில் ஆஜர்படுத்த, கோவை மாவட்ட ஆயு-தப்படை ஈச்சர் வேனில் போலீசார் அழைத்து சென்றனர். அங்கு ஆஜர்படுத்திவிட்டு கோவைக்கு நேற்று திரும்பினர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த நசியனுார் புறவழிச்சாலை, அப்பத்தாள் கோவில் அருகே, மாலை, 6:௦௦ மணியளவில் வேன் வந்தது. டிரைவர் ஆனந்தகண்ணன் ஓட்டினார். அப்போது சாலையை டூவீலரில் ஒருவர் திடீரென கடக்க முயன்றார். அவர் மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் பிரேக் பிடித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன், கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற டாரஸ் லாரி மீது மோதியது. இதில் வேனில் பய-ணித்த கோவை, ஆயுதப்படை எஸ்.ஐ., குமரேசனுக்கு தலை-யிலும், போலீசார் ஆனந்தகண்ணன், விக்னேஷ், ரங்கநாதனுக்கு சிராய்ப்பு காயமும் ஏற்பட்டது.
கைதி ஆரிப்ராஜாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. டாரஸ் லாரி டிரைவரான சேலம் மாவட்டம் ஓமலுார், ராசனுாரை சேர்ந்த மாதேஷ், 32; லாரியில் பயணித்த இருவர் என மூன்று பேர் காய-மடைந்தனர். சித்தோடு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்கு-வரத்து பாதித்தது.