/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருநீலகண்ட நாயனார் 79வது குருபூஜை விழா
/
திருநீலகண்ட நாயனார் 79வது குருபூஜை விழா
ADDED : ஜன 24, 2025 01:24 AM
திருநீலகண்ட நாயனார் 79வது குருபூஜை விழா
கொடுமுடி: திருநீலகண்ட நாயனார் சுவாமிக்கு 79-வது ஆண்டு குருபூஜை விழா கொடுமுடியில் நேற்று நடைபெற்றது. கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவிலில், திருநீலகண்ட நாயனார், ௭௯வது குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமிசிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளி கவசத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மகுடேஸ்வரர் மண்டபத்தில் திருநீலகண்ட நாயனார் தம்பதியர் உருவப்படத்துக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை கொடுமுடி வட்டார கொங்கு குலால மக்கள் குழுவினர் செய்திருந்தனர்.

