/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவிலில் தற்காலிக கடை ரூ.8.13 லட்சத்துக்கு ஏலம்
/
கோவிலில் தற்காலிக கடை ரூ.8.13 லட்சத்துக்கு ஏலம்
ADDED : ஜன 22, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிலில் தற்காலிக கடை ரூ.8.13 லட்சத்துக்கு ஏலம்
காங்கேயம்,:காங்கேயத்தை அடுத்த சிவன்மலை முருகன் கோவிலில், அடுத்த மாதம் தேர்த்திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு மலை கோவில் அடிவாரத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதற்கான பொது ஏலம் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. பி.டி.ஓ., அனுராதா தலைமை வகித்தார்.
ஏலத்தில், 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிவன் மலையை சேர்ந்த சுகுமார், 8.13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.