/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பங்க் உரிமையாளர்வீட்டில் 9 பவுன் திருட்டு
/
பங்க் உரிமையாளர்வீட்டில் 9 பவுன் திருட்டு
ADDED : ஜன 07, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்க் உரிமையாளர்வீட்டில் 9 பவுன் திருட்டு
பவானி, சித்தோடு, வசந்தம்நகரை சேர்ந்தவர் சுகுமார், 37; பெட்ரோல் பங்க் உரிமையாளர். சித்தோடு தாய்நகரில் உள்ள மாமனார் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் தங்கியிருந்தார். நேற்று காலை வீட்டுக்கு சென்றபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறை பீரோ உடைக்கப்பட்டு, மூன்றரை பவுன் தங்க ஆரம், மூன்று பவுன் தங்க வளையல், ஒரு பவுன் கம்மல், ஒன்றரை பவுன் மோதிரம் என, ஒன்பது பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. புகாரின்படி சித்தோடு போலீசார், கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

