/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முனியப்பன் கோவிலில் ஆடி மாத பொங்கல் விழா
/
முனியப்பன் கோவிலில் ஆடி மாத பொங்கல் விழா
ADDED : ஆக 01, 2024 02:14 AM
அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே, கூத்தம்பூண்டியில் பிரசித்தி பெற்ற, முள்ளுவாடி முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் பொங்கல் திருவிழா, கடந்த புதன் கிழமை பூச்சாட்டுத-லுடன் துவங்கி, முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று விமர்சையாக நடந்தது. பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து தீர்த்-தக்குடம் எடுத்துக்கொண்டு, கூத்தம்பூண்டியில் முக்கிய வீதி-களின் வழியே ஊர்வலமாக வந்தனர்.
பின் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு வழங்கிய ஆடு-களை வெட்டி, கோவில் பூசாரி உதிரம் குடித்தல் நிகழ்ச்சி நடந்-தது. இந்நிகழ்வில், ஆப்பக்கூடல், ஓசைபட்டி, மேட்டுப்பா-ளையம், புதுார், கரட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகு-திகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாளை மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.