/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
/
போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : ஆக 13, 2024 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் தலைப்பில், பவானி நகராட்சி அலுவலகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நகர்மன்றத் தலைவர் சிந்துாரி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பவானி புது பஸ் ஸ்டாண்ட் நிலைய வளாகத்தில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், நகர தி.மு.க., செயலாளர் நாகராசன், துாய்மை பணி ஆய்வாளர் ஜெகதீஷ், நகரவைத் தலைவர் மாணிக்கராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

