/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை
/
விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை
ADDED : ஆக 31, 2024 01:49 AM
கோபி: விநாயகர் சதுர்த்தி குறித்த ஆலோசனை கூட்டம் கோபி டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் நேற்று நடந்தது. இன்ஸ்-பெக்டர்கள் காமராஜ், விஜயலட்சுமி, செந்தில்குமார், ரவி பங்கேற்-றனர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் முருகேசன், புதிய இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி கேட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள உத்தரவுப்படி தான் சிலை வைக்க அனுமதிக்கப்படும். புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதி
கிடையாது என போலீசார் தெரிவித்தனர்.* சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பெருந்துறை பகுதியில் விநா-யகர் சிலைகள் அமைப்பது தொடர்பாக அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் தலை-மையில், நேற்று ஆலோசனை கூட்டம்
நடந்தது. பெருந்துறை இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் பெருமாள், விஜயமங்கலம் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.