/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை
/
சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : ஆக 31, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: பள்ளி மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு விதிமுறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் உடுமலை ரோட்டில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, நடந்து மற்றும் வாகனங்களில் செல்லும் போது, பின்பற்ற வேண்டிய விதிமுறை குறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் அறிவுரை வழங்கினார். இதுதொடர்பான காட்சிகளை திரையில் காட்டி, விளக்கம் அளித்தார்.