/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பா.ஜ., அரசை கண்டித்து கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ., அரசை கண்டித்து கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 08, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: லைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத, மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, இ.கம்யூ., கட்சி சார்பில், அந்தியூர்-மேட்டூர் பிரிவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பவானி ஒன்றிய செயலாளர் அருள் தலைமை வகித்தார். நகர செயலாளர் பாலமுருகன் வரவேற்றார்.
கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலத் தலைவர் குணசேகரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் மோகன் சிறப்புரையாற்றினர்.
ஏழை, எளிய மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை
தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.