/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு
/
இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு
இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு
இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு
ADDED : ஜூலை 02, 2024 06:32 AM
ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், ஈரோடு, வைராபாளையம் பகுதி மக்கள், மனு வழங்கி கூறியதாவது:
நாங்கள் வசித்து வரும் வைராபாளையம் சினிமா தியேட்டர் அருகே டையிங் ஆலைகள் அதிகம் உள்ளன. இவற்றில் இருந்து இரவு நேரங்களில் விஷத்தன்மை கொண்ட ரசாயன கழிவுநீர் சாக்-கடையில் திறக்கப்படுகிறது.
இதுபற்றி ஆலைகளில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தொடர்ந்து மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இக்கழிவு நீர், காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் கலந்து குடிநீரை மாசுபடுத்துகிறது. இதனால் பாசனம் பெறும் பயிர்-களும் பாதிக்கிறது. இப்பகுதி டையிங் பட்டறையில் இருந்து ரசா-யன கழிவு நீரை வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.