/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் பவானி நகராட்சி கூட்டத்தில் 'பத்திக்கிச்சு'

ADDED : ஆக 31, 2024 01:50 AM
பவானி : பவானி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் சிந்துாரி தலைமை வகித்தார். கூட்டத்தில் வார்டுகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். அம்ரூத் திட்டம், மழைநீர், சாக்கடை கால்வாய், நுாலகம் அமைத்தல் குறித்து கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு, சேர்மன் பதில் அளித்தார்.
கூட்டத்தில் இரண்டாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மோகன்-குமார், தங்கள் பகுதியில் தனி நபர் ஒருவர் சாக்கடையை ஆக்கிர-மித்து கட்டடம் கட்டியுள்ளார். அதை அகற்ற வேண்டும் என்றார். அப்போது எட்டாவது வார்டு
தி.மு.க., கவுன்சிலர் சுப்பிரமணியம், 27 வார்டுகளிலும் தனி நபர்கள் சாக்கடையை ஆக்கிரமித்து கட்-டடம் கட்டியுள்ளனர். எனவே அனைத்து வாடுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனால், மோகன்குமார்
கூறிய ஆக்கிரமிப்பை மட்டும் அகற்றக்கூடாது என்றார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவ-ரும ஒருமையில் பேச, மற்ற கவுன்சிலர்கள் இருவரையும் சமாதா-னப்படுத்தினர்.வளர்ச்சி திட்ட பணிகள் சம்பந்தமான கோரிக்கை குறித்து, நக-ராட்சி துறை அமைச்சர் நேருவை, சேர்மன் மற்றும் எட்டு தி.மு.க., கவுன்சிலர்கள் தனித்தனியே சந்தித்தது குறித்தும் கூட்-டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம், ஒருமை பேச்சு-களுக்கு இடையே, 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.