/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வணிக வளாகத்தில் எஸ்கலேட்டர் சீரமைப்பு
/
வணிக வளாகத்தில் எஸ்கலேட்டர் சீரமைப்பு
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், எஸ்கலேட்டரை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைத்தனர்.
ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், அமைக்கப்பட்டிருந்த எஸ்கலேட்டர், பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இரு நாட்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் பழுதடைந்தது. இதுகு-றித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வந்தது. இதன் எதிரொலியாக மாநகராட்சி அதிகாரிகள் எஸ்கலேட்டரை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.