/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி, கவுந்தப்பாடியில் விநாயகர் சிலை விசர்ஜனம்
/
கோபி, கவுந்தப்பாடியில் விநாயகர் சிலை விசர்ஜனம்
ADDED : செப் 08, 2024 07:28 AM
கோபி: சதுர்த்தி விழாவையொட்டி, கோபி டவுனில் இந்து முன்னணி சார்பில், கோபி பஸ் ஸ்டாண்ட், ஐந்து சாலை சந்திப்பு பிரிவு, வாய்க்கால்ரோடு, வண்டிப்பேட்டை, சீதாலட்சுமிபுரம், வடக்கு வீதி, தேர்வீதி, நஞ்சகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதியில், 22 விநாயகர் சிலைகள் நேற்று வைக்கப்பட்டு, பூஜை செய்து வழிபாடு நடந்தது.
இந்நிலையில் அனைத்து சிலைகளும் கோபி சீதா கல்யாண மண்டபம் முன், நேற்று மாலை கொண்டு வரப்பட்டன. அவற்றை கரைப்பதற்கான விசர்ஜன ஊர்வலம் தொடங்கியது. இதையொட்டி நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு துவங்கிய ஊர்வலம், ஜீவா செட், கோபி பஸ் ஸ்டாண்ட், எம்.ஜி.ஆர்., சிலை, வாய்க்கால்ரோடு வழியாக சந்தியா
வனத்துறையில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இதேபோல் கவுந்தப்பாடியில்
வைக்கப்பட்ட நான்கு விநாயகர் சிலைகள், பெருந்தலையூர் பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.அம்மாபேட்டையில்...சதுர்த்தியை ஒட்டி அம்மாபேட்டையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட ஒன்பது விநாயகர் சிலைகளும், சுற்று வட்டார
கிராமங்களில் மக்களால் வைக்கப்பட்ட, 32 சிலைகளும், அம்மாபேட்டை-அந்தியூர் பிரிவுக்கு வாகனங்களில் நேற்று மாலை
கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு செல்லப்பட்டு, காவிரியாற்றில் கரைக்கப்பட்டன. இதேபோல் பவானியில், இந்து முன்னணி மற்றும் மக்கள் சார்பில், 60 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து சிலைகள்
கூடுதுறையில் நேற்று விஜர்சனம் செய்யப்பட்டன. மீதி சிலைகள் நாளை கரைக்கப்படுகின்றன.சித்தோடு போலீஸ் எல்லையில், இந்து முன்னணி சார்பில், 32 சிலைகளும், மக்கள் சார்பில், 32 சிலைகளும்
வைக்கப்பட்டுள்ளன. சித்தோட்டில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் இன்றும், காலிங்கராயன்பாளயைத்தில் வைக்கப்பட்டுள்ள
சிலைகள் நாளையும் ஆற்றில் கரைக்கப்படவுள்ளன.கடம்பூரில்...கடம்பூர் மலைப்பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் நேற்றே கரைக்கப்பட்டன. கடம்பூர்
சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் ஏழு சிலைகள், மக்கள் சார்பில் எட்டு சிலைகள் என, 15 சிலைகள் வைத்து
பூஜை நடந்தது. மாலையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஏரியூரில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டன.