நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளான கொமாராபாளையம், ஆலத்துகோம்பை, சதுமுகை, கே.என்.பாளையம், தாசரிபாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, அரியப்பம்பாளையம், அக்கரை நெகமம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை, 4:10 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.
பரவலாக ஒரு மணி நேரம் கனமழையாக கொட்டி தீர்த்தது. 5:00 மணிக்கு மழை ஓய்ந்ததாலும் சாரல் மழையாக இடைவெளி விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதேபோல் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளிலும் மதியம் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

