/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழில் முனைவோராக விண்ணப்பிக்க அழைப்பு
/
தொழில் முனைவோராக விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 31, 2024 07:15 AM
ஈரோடு: தமிழக அரசு, இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தை அறிவித்துள்-ளது.
வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு வளர்ந்து வரும் தொழில் நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கில், இத்திட்டம் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொது பிரிவில்-2, ஆதிதிராவிடர் பிரிவில், 1 பட்டதாரி பயன் பெறலாம். இவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்ப-டுத்தும் திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் மூலம் பயன் பெறலாம். விண்ணப்பங்-களை ஆக., 10க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை, ஈரோடு வேளாண் அலு-வலர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஜெயசந்-திரன், போன்: 98423 70603ல் பெறலாம்.