ADDED : செப் 02, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பில், தாராபுரத்தில் கஞ்சி கலய ஊர்வலம் நேற்று நடந்தது. தாராபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து காலை, 11:00 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத்தில் திரளான பெண்கள், கஞ்சி கலயம் சுமந்து, ஓம் சக்தி பராசக்தி கோஷமிட்டு சென்றனர். சுந்தரம் அக்ரஹாரம் ஓம்சக்தி கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு கஞ்சி கலய வார்ப்பு மற்றும் விசேஷ பூஜை நடந்தது.
இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.