/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு வேளாளர் தொழில் நுட்ப கல்வி அறக்கட்டளை நிறுவனர் தின விழா
/
கொங்கு வேளாளர் தொழில் நுட்ப கல்வி அறக்கட்டளை நிறுவனர் தின விழா
கொங்கு வேளாளர் தொழில் நுட்ப கல்வி அறக்கட்டளை நிறுவனர் தின விழா
கொங்கு வேளாளர் தொழில் நுட்ப கல்வி அறக்கட்டளை நிறுவனர் தின விழா
ADDED : ஆக 19, 2024 02:57 AM
ஈரோடு : ஈரோடு கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளை நிறுவனர் தின விழா நடந்தது. கடந்த, 1983-ல் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த, 41 புரவலர்களால் கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி, கொங்கு பொறியியல் கல்லுாரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கொங்கு தொழிற்பயிற்சி நிலையம், கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி, கொங்கு கட்டட கலை கல்லுாரி, கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி ஆகிய கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
அறக்கட்டளை நிறுவனர் தினம் கொங்கு பொறியியல் கல்லுாரியில் நடந்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர், தலைவர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சென்னை எல் அண்ட் டி கட்டுமான நிறுவன, கனரக கட்டுமானப்பிரிவு பொது மேலாளர் சதாசிவம் கவுரவ விருந்தினராக பங்கேற்றார். அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், அறக்கட்டளை பாரம்பரிய உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.