/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி கமிஷனராக மனீஷ் பொறுப்பேற்பு
/
மாநகராட்சி கமிஷனராக மனீஷ் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 20, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய சிவகிருஷ்ண-மூர்த்தி இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில், புதிய கமிஷனராக ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான மனீஷ் நியமிக்கப்பட்டார். நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட அவவுக்கு, அலுவலர்கள், ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் கமிஷனர் மனீஷ் கூறியதாவது:
மாநகராட்சியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்-டங்கள் மேலும் சிறப்புடன் செயல்படுத்தவும், நிலுவையில் உள்ள திட்டங்களை, உரிய காலத்தில் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.