/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண் போலீஸ் கணவரை கடத்தி தாக்கிய கும்பலில் ஒருவர் கைது
/
பெண் போலீஸ் கணவரை கடத்தி தாக்கிய கும்பலில் ஒருவர் கைது
பெண் போலீஸ் கணவரை கடத்தி தாக்கிய கும்பலில் ஒருவர் கைது
பெண் போலீஸ் கணவரை கடத்தி தாக்கிய கும்பலில் ஒருவர் கைது
ADDED : ஆக 26, 2024 08:16 AM
ஈரோடு: ஈரோடு, ரங்கம்பாளையம், முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பேஸ்-6ஐ சேர்ந்தவர் சசிகுமார், 53; இவர் மனைவி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு. அவசர தேவைக்காக எர்ட்டிகா காரை அட-மானம் வைத்து பணம் பெற, 46 புதுார் வெள்ளாளபாளையத்தை சேர்ந்த மதன் குமார், 44, என்பவரை சசிகுமார் அணுகியுள்ளார்.
அவரோ தஞ்சாவூரை சேர்ந்த அசரப் என்பவரிடம் அழைத்து சென்று, காரை அடமானம் வைத்து, 2.10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தந்துள்ளார். காரை திருப்பி கொள்ள நான்கு மாத அவ-காசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அடமானம் வைத்த சில நாட்களிலேயே காரை திருப்புவதற்கு மதன்குமாரை அணுகி-யுள்ளார். அசரப்பிடம் நேரடியாக கேட்டு பெற்று கொள்ளுமாறு கூறவே, அசரப்பை சசிகுமார் அணுகியபோது, வேறு ஒருவரிடம் காரை அடமானம் வைத்திருப்பது தெரியவந்தது.
அதன் பின் அசரப், தன் மொபைல் போனை ஆப் செய்து விட்டார். சசிகுமாரோ காரை பெற்று தருமாறு மதன்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சசிகுமாரை நேற்று முன்தினம், மதன்குமார் உள்ளிட்ட மூன்று பேர், காரில் கடத்தி சென்று தாக்கியுள்ளனர்.செட்டிபாளையம் பகுதியில் ஒரு லாட்ஜில் அடைத்து மதுவை குடிக்க வைத்து தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்பி சசிகுமார் அளித்த புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் மதன்குமாரை கைது செய்த நிலையில், மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

