/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுவர்கள் ஓட்டிய ௧௨ டூவீலர் பறிமுதல் பெற்றோருக்கு தலா ரூ.25,000 அபராதம்
/
சிறுவர்கள் ஓட்டிய ௧௨ டூவீலர் பறிமுதல் பெற்றோருக்கு தலா ரூ.25,000 அபராதம்
சிறுவர்கள் ஓட்டிய ௧௨ டூவீலர் பறிமுதல் பெற்றோருக்கு தலா ரூ.25,000 அபராதம்
சிறுவர்கள் ஓட்டிய ௧௨ டூவீலர் பறிமுதல் பெற்றோருக்கு தலா ரூ.25,000 அபராதம்
ADDED : ஜூலை 06, 2024 07:06 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் இதுவரை டூவீலர் ஓட்டி வந்த, 12 சிறு-வர்களின் பெற்றோருக்கு தலா, 25,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் டூவீலர், கார் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க போக்குவரத்து உட்பட பிற பிரிவு போலீசாரும், வாகன தணிக்கை செய்து வரு-கின்றனர். ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், குமலன்குட்-டையில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது டூவீலரில் வந்த, 3 சிறுவர்களை பிடித்தனர். மூவரும், ௧௭ வயதான கல்லுாரி மாணவர்கள் என தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்-தனர்.
ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவை-நாதன், வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா, 25,000 ரூபாய் வீதம் அபராதம் விதித்தார். இந்நிலையில் நேற்று ஈரோடு கொங்காலம்மன் கோவில் வீதியில், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்து, ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்ப-டைத்தனர்.
இதுபோல மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மொத்தம் நான்கு பைக், பவானி வட்டார போக்குவரத்து அலுவ-லகத்தில் ஐந்து பைக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஓட்டி வந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்-தினால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை திரும்ப பெற முடியும் என்று, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.