/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
பெருந்துறை வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பெருந்துறை வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பெருந்துறை வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 20, 2024 02:33 AM
பெருந்துறை: பெருந்துறை, கோட்டைமேடு, விநாயகர், வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், பவானி எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அருணாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அருள்ஜோதி செல்வராஜ், ௧.௫௦ லட்சம் ரூபாய் செலவில் கோவில் கட்டுமான பணிகளை செய்தார். விழாவையொட்டி, ௨,௦௦௦ பேருக்கு அன்னதானம் வழங்கினார். மாவட்ட கழக பொருளாளர் மணி, பெருந்துறை நகர செயலாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர் .