/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் வசதி கோரி ஆர்.டி.ஓ.,விடம் புதுக்கரைப்புதுார் மக்கள் மனு
/
பஸ் வசதி கோரி ஆர்.டி.ஓ.,விடம் புதுக்கரைப்புதுார் மக்கள் மனு
பஸ் வசதி கோரி ஆர்.டி.ஓ.,விடம் புதுக்கரைப்புதுார் மக்கள் மனு
பஸ் வசதி கோரி ஆர்.டி.ஓ.,விடம் புதுக்கரைப்புதுார் மக்கள் மனு
ADDED : ஆக 14, 2024 01:34 AM
கோபி: கோபி அருகே எல்லமடை வழியாக, பஸ் வசதி கோரி, புதுக்க-ரைப்புதுார் கிராம மக்கள், கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பனிடம் நேற்று மனு கொடுத்தனர்.
மனு விபரம்: நஞ்சை கோபி, புதுக்க-ரைப்புதுார், எல்லமடை மற்றும் பாரதி நகரில், 200க்கும் மேற்-பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். புதுக்கரைப்புதுார் மற்றும் எல்-லமடை பகுதிக்கு, முன்பு இயங்கிய பஸ் மற்றும் மினி பஸ் தற்-போது இயக்கப்படுவதில்லை. இதனால் கூலி வேலைக்கு செல்வோர் முதல், பள்ளி மற்றும் கல்லுாரிக்கு செல்லும், மாணவ, மாணவியர், இரண்டரை கி.மீ., துாரம் நடந்து சென்று அவதியுறுகின்றனர். எனவே அந்தியூர்-கோபி செல்லும் பஸ்-களை, பொலவக்காளிபாளையம், எல்லமடை, புதுக்கரைப்புதுார் வழியாக இயக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்ற ஆர்.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.