/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடிப்பெருக்கில் பக்தர்கள் குளிக்க காவிரி கரையில் குழாய் அமைப்பு
/
ஆடிப்பெருக்கில் பக்தர்கள் குளிக்க காவிரி கரையில் குழாய் அமைப்பு
ஆடிப்பெருக்கில் பக்தர்கள் குளிக்க காவிரி கரையில் குழாய் அமைப்பு
ஆடிப்பெருக்கில் பக்தர்கள் குளிக்க காவிரி கரையில் குழாய் அமைப்பு
ADDED : ஆக 02, 2024 01:56 AM
ஈரோடு, காவிரி ஆற்றில், ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் செல்கிறது. இதனால் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை நாட்களில், பக்தர்கள் குளிக்க வசதியாக, காவிரி கரைகளில் உள்ள சில கோவில்களில், குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி கூறியதாவது:
ஆக.,3ம் தேதி, 4ம் தேதி, ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை வருகிறது. இதனால் கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவர். அதேசமயம் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள கோவில்களில், புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த நாட்களில், பக்தர்கள் காவிரி நதிக்கரையில் முன்னோர்களுக்கான திதி, தர்ப்பணம் மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர், நஞ்சைகாளமங்கலம் மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள், குலவிளக்கம்மன், அம்மாபேட்டை சொக்கநாதசுவாமி கோவில்களில், கரையோர பகுதியில் குழாய் மூலம் காவிரி நதி நீர் தெளிப்பதற்கு, அந்தந்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு
செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.