/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'விடுதியில் அனைவருக்கும் இடம்' பாலிடெக்னிக் மாணவர் கோரிக்கை
/
'விடுதியில் அனைவருக்கும் இடம்' பாலிடெக்னிக் மாணவர் கோரிக்கை
'விடுதியில் அனைவருக்கும் இடம்' பாலிடெக்னிக் மாணவர் கோரிக்கை
'விடுதியில் அனைவருக்கும் இடம்' பாலிடெக்னிக் மாணவர் கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2024 02:14 AM
ஈரோடு : பெருந்துறை சிலேட்டர் நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
சிலேட்டர் நகர் அரசு பாலிடெக்னிக்கில், மாணவர்களுக்கு என தனி விடுதி செயல்படுகிறது.
இங்கு அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மாணவர்கள் தங்கி வந்தனர். சில நாட்களுக்கு முன், விடுதி நிர்வாக உத்தரவுப்படி பி.சி., எம்.பி.சி., தவிர பிற பிரிவு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த வகையில், 40 பேர் வெளியேற்றப்பட்டு, வெளியில் கட்டணம் செலுத்தியும், பஸ் ஸ்டாண்ட்களில் தங்கியும் படித்து வரும் நிலையில் உள்ளனர். வெளியேற்றப்பட்ட அனைத்து சமூக மாணவர்களுக்கும் விடுதியில் தங்கி படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். பாலிடெக்னிக் படிக்கும் பட்டியல் இன மாணவர்களுக்கு அரசு விடுதி பற்றாக்குறையாக உள்ளது. இதுபற்றியும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.