/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு போக்சோ
/
சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு போக்சோ
ADDED : ஆக 01, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சிறுமியை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபரை, போக்சோ பிரிவின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்ப-திவு செய்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஆலாம்பாளையம் செல்வராஜ் மகன் ராஜ்குமார், 21, கூலி தொழிலாளி. இவர், பவா-னியை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் ஆசை காட்டி, கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, 1098 சைல்டு லைன் அலுவலர்கள் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி, குழந்தை திருமண தடை சட்ட பிரிவு மற்றும் போக்சோ பிரிவின் கீழ், ராஜ்குமார் மீது வழக்குப்ப-திவு செய்து விசாரித்து வருகின்றனர்.