/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாலிபர் தற்கொலையில் போலீசார் மீது குற்றச்-சாட்டு உறவினர்கள் மறியலால் அந்தியூரில் பரபரப்பு

ADDED : செப் 04, 2024 08:59 AM
பவானி: வாலிபர் தற்கொலைக்கு, போலீசாரே காரணம் என்று கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்-டதால், அந்தியூரில்பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளித்திருப்பூர் அருகே வட்டக்காட்டை சேர்ந்த ரவிக்குமார் மகன் சுப்ரதீபன், 21; அந்தியூர் அருகே வெள்ளைபிள்ளையார் கோவில் பகு-தியில் குடும்பத்துடன் ரவிக்குமார் வசிக்கிறார்.இரு மாதங்களுக்கு முன் வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள, உறவினரின் காய்கறி கடையில் சுப்ரதீபன் இருந்தார். அப்போது முன்-விரோதம் காரணமாக பவானி, பெரியமோளபா-ளையத்தை சேர்ந்த சசிக்குமார், அவரது நண்-பர்கள் என எட்டு பேர் சுப்ரதீபனை தாக்கியுள்-ளனர்.
இதுகுறித்த புகாரில் அந்தியூர் போலீசார், சசிக்-குமார் உள்பட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் சுப்ரதீபன் அளித்த புகார் பொய்யானது எனக்கூறி, அந்தியூர் போலீசார் அவரது வீட்டில், கடந்த மாதம், 29ம் தேதி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனிடையே வட்டக்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில், சுப்ரதீபன் நேற்று மதியம் துாக்-கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைய-டுத்து உடல் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அந்தியூர் போலீசார், பொய் வழக்கு என நோட்டீஸ் ஒட்டிய காரணத்தால், சுப்ரதீபன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான சசிக்குமார் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்ய வேண்டும் என்று கூறி, அந்-தியூர் அரசு மருத்துவமனை முன் உறவினர்கள், 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடு-பட்டனர். பவானி டி.எஸ்.பி., சந்திரசேகரன், அந்-தியூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்-டனர்.