/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாமியாரை வேலால் குத்திய மருமகன் கைது
/
மாமியாரை வேலால் குத்திய மருமகன் கைது
ADDED : செப் 02, 2024 02:48 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம், தோப்பூரை பகுதியை சேர்ந்த சத்யா மகள் நிவேதா, 24; இவரின் கணவர் சத்தி, கொண்டப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கார்த்தி, 27; குடிப்பழக்கத்துக்கு கார்த்தி அடிமையானதால், தாய் சத்யா வீட்டுக்கு நிவேதா ஓராண்டுக்கு முன் வந்து விட்டார். பல முறை குடும்பம் நடத்த அழைத்தும் அவர் செல்லவில்லை.
இதனால் மாமியார் சத்யா மீது ஆத்திரமடைந்த கார்த்தி, சில நாட்களுக்கு முன் அவர் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றார். வேலால் மாமியாரை பல இடங்களில் குத்தி விட்டு ஓட்டம பிடித்தார். பங்களாப்புதுார் போலீசார் கார்த்தியை நேற்று கைது
செய்தனர். கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.