/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போராட்ட அறிவிப்பால் அமைகிறது வேகத்தடை
/
போராட்ட அறிவிப்பால் அமைகிறது வேகத்தடை
ADDED : பிப் 25, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, நசியனுார் சாலை, கைகாட்டிவலசு பிரிவில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வலியுறுத்தி, நசி-யனுார் சாலை, திருவள்ளுவர் நகர் மக்கள், நாளை மறியலில் ஈடு-பட உள்ளதாக அறிவிப்பு செய்தனர்.
இதன் எதிரொலியாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கைகாட்டி வலசு பிரிவில் நேற்று வந்து ஆய்வு செய்தனர். அவ்வி-டத்தில் திருவள்ளுவர் நகர், பாரதியார் நகர், திருவள்ளுவர் நகர் வீட்டு உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாளை (இன்று) காலை வேகத்தடை அமைத்து தரு-வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் மறியல் போராட்-டத்தை மக்கள் ஒத்தி வைத்தனர்.

