/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி கரையோர பகுதியில் வெள்ள அபாயம் பற்றி ஆய்வு
/
காவிரி கரையோர பகுதியில் வெள்ள அபாயம் பற்றி ஆய்வு
ADDED : ஆக 01, 2024 02:22 AM
ஈரோடு: மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றின் கரையோரமான கொடுமுடி, மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டத்தில், 30 கிராமங்கள் காவிரி ஆற்றின் கரை ஓரம் உள்ளன. இதில், 18 கிராமங்கள் உபரி நீரால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை-யாக, மக்கள் தங்குவதற்கு ஏதுவாக, 77 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. வருவாய் துறை, தீயணைப்பு துறை, உள்ளாட்சி துறையினர், 24 மணி நேர சுழற்சி முறையில் கண்கா-ணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி ஆற்றில் நேற்று காலை, 1.25 லட்சம் கனஅடி உபரி நீர் வந்து கொண்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக கூடும் என்பதால், கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, கலெக்டர் யோசனை தெரிவித்தார். லக்காபுரம் பஞ்சாயத்து பரிசல் துறை, காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில் பகுதி காவிரி ஆற்றங்கரையை ஆய்வு செய்தார். அப்பகு-தியில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கவும், அங்கு குடிநீர், மின்-சாரம், கழிப்பிடம் போன்ற வசதிகள் உள்ளதை பார்வையிட்டார்.
நஞ்சை காளமங்கலம் பஞ்சாயத்து குலவிளக்கு அம்மன் கோவில், சத்திரப்பட்டி பஞ்சாயத்து, கொளாநல்லி கிராமங்களில் பொதுமக்கள் தங்குவதற்கான இடங்களையும் பார்வையிட்டார். ஈரோடு ஆர்.டி.ஓ., சதீஸ்குமார், உதவி ஆணையர் (கலால்) ஜீவ-ரேகா உட்பட பலர் பங்கேற்றனர்.