/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
களை கட்டிய ஆடி மாத முதல் வெள்ளி வழிபாடு
/
களை கட்டிய ஆடி மாத முதல் வெள்ளி வழிபாடு
ADDED : ஜூலை 20, 2024 07:08 AM
ஈரோடு : ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மன் கோவில்கள் களை கட்டின. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்-மனை வழிபட்டனர்.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்ப-டுகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை, அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களை, மக்கள் வெகு விமரி-சையாக கொண்டாடுவர். இந்த வகையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, அதிகாலை முதலே அம்மன் கோவில்களுக்கு, பெண்கள் படையெடுக்கத் தொடங்கினர்.
ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறந்து, பல்வேறு சிறப்பு அபி-ஷேகம் செய்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். கோவில் வளாகத்தில் ஒரு சில பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதேபோல் காரை வாய்க்கால் சின்ன மாரியம்மன், பெரியவ-லசு சின்ன மாரியம்மன், கொங்காலம்மன், கள்ளுக்கடைமேடு பத்-ரகாளியம்மன் கோவில், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில், எல்லை மாரியம்மன் கோவில், சூரம்பட்டி மாகாளி-யம்மன் கோவில், வீரப்பன்சத்திரம் காவிரி ரோடு சின்னமாரி-யம்மன் கோவில் உள்பட மாநகரில் அனைத்து அம்மன் கோவில்-களிலும், சிறப்பு பூஜை, அலங்காரம் என கோவில்கள் களை கட்-டின.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெண் பக்தர்கள், அம்மன் சன்னதி எதிரேயுள்ள குண்டத்தில் தீப-மேற்றி வழிபட்டனர். உச்சிகால பூஜையில் பக்தர்கள் குவிந்தனர். இதேபோல் சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றி-யம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* அந்தியூர் பத்ரகாளியம்மன், அங்காளம்மன், தவிட்டுப்பா-ளையம் சவுடேஸ்வரியம்மன், அழகு முத்துமாரியம்மன் கோவில் மற்றும் சுற்று வட்டார அம்மன் கோவில்களில், ஆடி மாத முதல் வெள்ளி வழிபாடு அமர்க்களமாக நடந்தது.