/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு சாலை மறியலால் பரபரப்பு
/
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு சாலை மறியலால் பரபரப்பு
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு சாலை மறியலால் பரபரப்பு
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு சாலை மறியலால் பரபரப்பு
ADDED : ஜூலை 02, 2024 07:21 AM
தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் குண்டடம், பழைய நவக்கொம்பு பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை, இடையன் கிணறு அருகே திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக புது கட்டடம் கட்டப்பட்டது. இடையன் கிணறு பகுதியில் நேற்று கடை திறக்க மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து குண்டடம் நால்ரோடு பகுதியில், 300க்கும் மேற்-பட்ட மக்கள், மறியல் போராட்டத்தில் குதித்தனர். பைபாஸ் சாலை என்பதால் போக்குவரத்து பாதித்தது.
தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி, டாஸ்மாக் துணை மேலாளர் நந்தகோபால் உள்ளிட்ட அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும், 15 நாட்களுக்கு இங்கு கடை திறக்கப்படாது. அதேசமயம் மக்களின் எதிர்ப்பு குறித்து, கலெக்டரிடம் தெரிவிக்-கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.